TNPSC Thervupettagam

உலக மனிதநேய தினம் – ஆகஸ்ட் 19

August 21 , 2021 1104 days 349 0
  • மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்கையில் தங்களது உயிரை இழந்த அல்லது உயிரைப் பணயம் வைத்த மனித நேயமிக்க ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் 12வது உலக மனிதநேய தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘The Human Race : a global challenge for Climate Action in Solidarity with people who need it the most’ என்பதாகும்.
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதியானது, பாக்தாத்திலுள்ள ஐ.நா. தலைமையகத்தின் மீது நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்பில் ஈராக் நாட்டிற்கான பொதுச் செயலாளரின் அப்போதைய சிறப்புப் பிரதிநிதியான சர்கியோ வியரா டி மெல்லோ (Sérgio Vieira de Mello) என்பவரும் அவரது 21 சக ஊழியர்களும் கொல்லப் பட்டதை நினைவு கூறும் தினமாகும்.
  • இத்தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று கடைபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்