இந்த நாள் என்பது மன நலிவு நோய் (டவுன் சிண்ட்ரோம்) பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், அந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
மன நலிவு நோய் என்பது 21வது குரோமோசோமின் ஒரு கூடுதல் நகல் இருப்பதால் ஏற்படும் ஒரு மரபணு நிலையாகும்.
இந்த கூடுதல் மரபணு பொருள் ஒரு நபரின் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்பதோடு, இது மாறுபட்ட உடல் மற்றும் அறிவாற்றல் பண்புகளுக்கும் வழி வகுக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பழமையான கருத்துகளை முடிவுக்கு கொண்டு வருதல்’ என்பதாகும்.