மன நலிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மன நலிவு நோய் உள்ளவர்களின் உரிமைகள், உள்ளடக்கம் மற்றும் நல்வாழ்வு போன்றவற்றினை ஆதரிக்கச் செய்யவும் வேண்டி இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
21வது குரோமோசோமின் மூன்றாவது நகல் இனம் பெறுவதால் மன நலிவு நோய் ஏற்படுவதோடு, 21/3 (மார்ச் 21) என்பது இந்த மரபணு நிலையைக் குறிக்கச் செய்கிறது என்பதால் இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் தினமானது முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
இது 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "With Us Not For Us" என்பதாகும்.