உலகெங்கிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனரின் பங்கை ஊக்குவிக்கவும் அவர்களை ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 அன்று உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் துருக்கியின் இஸ்தான்புல்லில் சர்வதேச மருந்து கூட்டமைப்பால் (International Pharmaceutical Federation - FIP) உருவாக்கப்பட்டது.
சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு ஆனது 4 மில்லியனுக்கும் அதிகமான மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, ‘அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் திறனுள்ள மருந்துகள்’ என்பதாகும்.