TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை 2022

December 20 , 2022 704 days 468 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக மலேரியா அறிக்கையினை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • உலக நாடுகளின் இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தினையும் அறிக்கை எடுத்து உரைக்கச் செய்வதோடு, மலேரியாவைக் கட்டுப்படுத்துவதிலும், அகற்றுவதிலும் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களையும் இந்த அறிக்கை அடையாளம் காட்டுகிறது.
  • அதிக நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மலேரியா நாடுகளில், 2021 ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை நிலைப் படுத்தப் பட்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 625,000 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 619,000 ஆக குறைந்துள்ளது.
  • இருப்பினும், பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளை விட இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது (2019 ஆம் ஆண்டில் 568,000 இறப்புகள்).
  • அதிக நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை உள்ள 11 நாடுகளுள், 5 நாடுகளில் (காங்கோ ஜனநாயகக் குடியரசு, கானா, இந்தியா, நைஜர் மற்றும் தான்சானியா) மலேரியாவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.
  • 2016-2030 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் மலேரியாவிற்கான உலகளாவியத் தொழில்நுட்ப உத்தியானது, 2020 ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைந்தபட்சம் 40 சதவிகிதமாகவும், 2025 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 75 சதவிகிதமாகவும் மற்றும் 2015 ஆம் ஆண்டின் அளவுகளுக்குப் பதிலாக 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்த பட்சம் 90 சதவிகிதமாகவும் அதனைக் குறைக்க முயல்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் மலேரியா நோய்ப் பாதிப்பு 48 சதவீதமாக இருந்தது.
  • அந்த ஆண்டில், நோய்ப் பாதிப்புள்ள 1,000 பேரில் 59 நபர்கள் ஆபத்தான நிலையில் இருந்த நிலையில், இது அதற்கு விதிக்கப்பட்ட 31 என்ற இலக்கை விட அதிகமாகும்.
  • இறப்பு நிகழ்வுகளும் 48 சதவிகிதம் என்ற இலக்கிலேயே நீடிக்க வில்லை (2021 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட 14.8 என்ற இலக்கிற்குப் பதிலாக 7.8 பதிவானது).
  • இந்தப் போக்கு நீடித்தால், மலேரியாவை ஒழிப்பதற்கான போராட்டத்தில் உலகம் 88 சதவிகிதம் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்