2022 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான மலேரியா பாதிப்பு எண்ணிக்கைகள் 249 மில்லியனாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இது பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பு பதிவான அளவை விட 16 மில்லியன் அளவு அதிகரித்துள்ளது.
உலகளாவிய மலேரியா எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆனது, கோவிட்-19 பெருந்தொற்று சார்ந்த இடையூறுகள், மருந்து மற்றும் பூச்சிக் கொல்லி எதிர்ப்புத் திறன், முக்கிய மனிதாபிமான நெருக்கடிகள், வளங்களின் பற்றாக்குறை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றப் பாதிப்புகள் உட்பட பல சவால்களை எதிர்கொள்கிறது.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த முதல் மலேரியா தடுப்பூசி RTS,S/AS01 உள்ளிட்ட பல தடுப்பூசிகளின் உருவாக்கத்தினை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது.
சமீபத்தில் R21/Matrix-M எனப்படும் இரண்டாவது தடுப்பூசியினைப் பயன்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது.
நைஜீரியா (27%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (12%), உகாண்டா (5%), மற்றும் மொசாம்பிக் (4%) ஆகிய நான்கு நாடுகள் உலகளவில் பதிவான மலேரியா பாதிப்புகளில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட பங்கினைக் கொண்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதிவான மலேரியா பாதிப்புகளில் வியத்தகு வகையில் இந்தியா 66% பங்கினைக் கொண்டுள்ளது.
ஒரு புரோட்டோசோவா ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் விவாக்ஸ், இப்பகுதியில் சுமார் 46% மலேரியா பாதிப்புகளுக்குக் காரணமாயிருந்தது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மலேரியாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 94% இறப்புகள் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில், 94% மலேரியா பாதிப்புகள் மற்றும் உலகளவில் மலேரியாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 95% பங்குடன் ஆப்பிரிக்கா அதிக மலேரியா பாதிப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஆனது, மலேரியா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதங்களை 2025 ஆம் ஆண்டில் 75% ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 90% ஆகவும் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.