TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை 2024 - WHO

December 16 , 2024 7 days 80 0
  • 2023 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நான்கு மில்லியன் பாதிப்புகள் பதிவாகியுள்ள எட்டு மலேரியா தொற்று மிக்க நாடுகள் உள்ளன.
  • பிராந்தியத்தில் பதிவாகியுள்ள பாதி எண்ணிக்கையிலான பாதிப்புகள் இந்தியாவில் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவானது சுமார் மூன்றில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில், 2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 17.7 மில்லியன் பாதிப்புகள் குறைந்து உள்ளன.
  • 1,000 பேருக்கு சுமார் 20 பாதிப்புகளாக இருந்த ஆபத்து நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது சுமார் 1.5 பாதிப்புகளாகக் குறைந்துள்ளதையடுத்து, மலேரியா பாதிப்புகள் 93% குறைந்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா பாதிப்பு அற்ற நாடு என சான்றளிக்கப்பட்டது.
  • உலகளவில், 2023 ஆம் ஆண்டில், 83 மலேரியா தொற்று மிக்க நாடுகளில் 29 நாடுகள் உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் சுமார் 95% பாதிப்புகளுக்கும், மலேரியா காரணமான உயிரிழப்புகளில் 96% உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்தன.
  • நைஜீரியா (25.9%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (12.6%), உகாண்டா (4.8%), எத்தியோப்பியா (3.6%), மற்றும் மொசாம்பிக் (3.5%) ஆகியவை உலகம் முழுவதும் உள்ள மலேரியா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்டுள்ளன.
  • நைஜீரியா (30.9%), காங்கோ ஜனநாயகக் குடியரசு (11.3%), நைஜர் (5.9%), மற்றும் தான்சானியா (4.3%) ஆகிய நான்கு நாடுகள் மட்டும் உலகளவிலான மலேரியா உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்