மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் டகுடோ ஒடோகுரோ என்பவரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றார்.
உலகளவில் இது அவருக்கு இரண்டாவதுப் பதக்கமாகும். 2013 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் பஜ்ரங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்ற நான்காவது இந்தியர் ஆவார்.
19 வயதில் ஓடோகுரோ ஜப்பானின் மிக இளைய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார், உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் ஆவார். அவர் 2010 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் 66 கிலோ எடைப்பிரிவில் நடந்த போட்டியில் இதைச் சாதித்தார்.