இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்கள் கல்வித் துறையில் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த விஞ்ஞானி மற்றும் சிறந்த அரசியல்வாதியான அவர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை 11வது இந்தியக் குடியரசுத் தலைவராக அவர் பணி ஆற்றினார்.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிறகு, டாக்டர் கலாம் அவர்கள் மீண்டும் தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.