இந்த நாள் மின்சாரப் போக்குவரத்தின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
முதலாவது உலக மின்சார வாகன தினம் ஆனது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
இந்தத் தினமானது, அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மின்சார வாகனங்களைக் கொண்டாடுவதோடு, இந்த மாற்றமானது உண்மையில் எவ்வளவு பலனளிக்கிறது மற்றும் போக்குவரத்தினை எளிதாக்குகிறது என்பது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
தற்போது, இந்தியாவில் சுமார் 2.9 மில்லியன் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2022-23 ஆம் ஆண்டில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டு ஊடுருவல் விகிதம் ஆனது மொத்த வாகனப் பயன்பாட்டில் 5.3 சதவீதத்தைத் தொட்டது.
இது 2020-21 ஆம் ஆண்டில் பதிவான நிலையிலிருந்து கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகம் ஆகும்.