TNPSC Thervupettagam

உலக மின்னணுக் கழிவுகள் கண்காணிப்பு அறிக்கை 2024

March 25 , 2024 244 days 290 0
  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 62 பில்லியன் கிலோ மின்னணுக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • இதில் 31 பில்லியன் கிலோ உலோகங்கள், 17 பில்லியன் கிலோ நெகிழிகள் மற்றும் 14 பில்லியன் கிலோ மற்ற பொருட்கள் (கனிமங்கள், கண்ணாடி, கலவைப் பொருட்கள் போன்றவை) ஆகும்.
  • ந்த எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டில் 82 பில்லியன் கிலோவாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில் உலகளவில் 34 பில்லியன் கிலோ மின்னணுக் கழிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த 62 பில்லியனில், சுமார் 13.8 பில்லியன் கிலோவானது 'முறைப்படிச் சேகரிக்கப் பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்யப் பட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த மறுசுழற்சி அளவானது 2010 ஆம் ஆண்டில் 8 பில்லியன் கிலோவாக இருந்தது.
  • குறைவான மற்றும் மிகவும் குறைவான - நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 18 பில்லியன் கிலோ கழிவுகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளால் கையாளப் படுகின்றது.
  • ஒவ்வோர் ஆண்டும் 58,000 கிலோ பாதரசம் மற்றும் புரோமினேற்றம் செய்யப்பட்ட தீ தடுப்பான்களைக் கொண்ட சுமார் 45 மில்லியன் கிலோ நெகிழிகள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகின்றன.
  • ஐரோப்பா (17.6 கிலோ), ஓசியானியா (16.1 கிலோ) மற்றும் அமெரிக்கா (14.1 கிலோ) ஆகியவை 2022 ஆம் ஆண்டில் தனிநபர் மின்னணுக் கழிவுகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளன.
  • ஆசியாவில் உள்ள நாடுகள் உலகின் மின்னணுக் கழிவுகளில் மொத்தத்தில் கிட்டத் தட்டப் பாதியளவினை (30 பில்லியன் கிலோ) உற்பத்தி செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்