இது நீடித்த நிலையான மீன்வளத்தின் முக்கியத்துவத்தையும், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதன் ஒரு அவசியத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
1997 ஆம் ஆண்டு புது டெல்லியில் "உலக அளவிலான மீன்பிடியாளர்கள் மற்றும் மீன் தொழிலாளர்களின் மன்றம்" என்ற கூட்டத்தின் போது இந்த நாள் உருவாக்கப்பட்டது.
இந்த நாள் ஆனது அதீத மீன்பிடித்தல், வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உட்பட, உலகின் மீன்வளம் எதிர்கொள்ளும் பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்திய நாடானது, சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் உற்பத்தியில் 3வது இடத்திலும், மீன் வளர்ப்புத் துறையில் 2வது இடத்திலும் உள்ளதோடு இறால் உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “India’s Blue Transformation: Strengthening Small-Scale and Sustainable Fisheries” என்பதாகும்.