TNPSC Thervupettagam

உலக முதலீட்டு அறிக்கை 2023

July 21 , 2023 364 days 216 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பானது, 2023 ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆனது முந்தைய ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 662 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலக அந்நிய நேரடி முதலீடு ஆனது 12% குறைந்து 1.3 டிரில்லியன் டாலராக உள்ளது.
  • ஆசியாவில், சீனா (மற்றும் ஹாங்காங்), சிங்கப்பூர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடானது அதிக அளவில் குவிந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் வருடாந்திர அடிப்படையில் 10% அதிகரித்து 49 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • சீனாவில் 5% வருடாந்திர வளர்ச்சியுடன் 189 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.
  • சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் முறையே 8% மற்றும் 10% அதிகரித்து 141 பில்லியன் டாலர் மற்றும் 23 பில்லியன் டாலராக உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் தூய எரிசக்தித் துறையில் 544 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீட்டினை ஈர்த்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்