2019 ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கை வணிக மற்றும் வளர்ச்சி மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கினால் (UNCTAD - United Nation Conference on Trade and Development) வெளியிடப்பட்டுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய நேரடி முதலீடானது (FDI - Foreign Direct Investment) 6 சதவிகிதம் அதிகரித்து 42 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது என்று கூறுகின்றது.
2017-18 ஆம் ஆண்டுகளில் FDI பெற்றதற்கான முன்னிலையில் உள்ள 20 பெரும் பொருளாதாரங்களிடையே இந்தியா தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
உற்பத்தி, தொலைத் தொடர்பு மற்றும் நிதியியல் சேவை ஆகிய துறைகள் இவற்றில் முன்னிலை வகிக்கின்றன.
UNCTAD
195 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இதன் முக்கியப் பணி வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதாகும்.
மேலும் இது உலகப் பொருளாதாரத்தில் வளரும் நாடுகள் ஒருங்கிணைவதற்காக அந்த நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுகின்றன.