உலக முதலுதவி தினமானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Federation of Red Cross - IFRC) மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றினால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமையானது உலக முதலுதவி தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இத்தினமானது அன்றாட மற்றும் நெருக்கடி கால சூழ்நிலைகளில் முதலுதவியின் மூலம் எவ்வாறு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் உட்பட அனைவருக்கும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
2019 ஆம் ஆண்டின் உலக முதலுதவி தினத்தின் கருத்துரு, "முதலுதவி மற்றும் விடுபட்ட மக்கள்" ஆகும்.