TNPSC Thervupettagam

உலக முதலை தினம் - ஜூன் 17

June 20 , 2024 11 days 121 0
  • உலகெங்கிலும் உள்ள அழிந்து வரும் முதலைகள் மற்றும் பெரிய அலகுடைய முதலைகளின் அவலநிலையை முன்னிலைப்படுத்தச் செய்வதற்காக வேண்டி இந்த உலகளாவிய விழிப்புணர்வுத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த விலங்கினக் குடும்பத்தில் சுமார் 24 இனங்கள் உள்ளன என்ற நிலையில் இதில் 'உண்மையான முதலைகள்', பெரிய அலகுடைய முதலைகள், தென் அமெரிக்க முதலை வகை (கெய்மன்) மற்றும் கங்கை நீர்  முதலை (கரியல்) ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவில் மூன்று முதலை இனங்கள் காணப்படுகின்றன.
    • மக்கர் அல்லது சதுப்பு நில முதலை (க்ரோக்கொடைலஸ் பளுஸ்ட்ரீஸ்);
    • கழிமுகம் அல்லது உப்புநீர் முதலை (க்ரோக்கொடைலஸ் போரோசஸ்) மற்றும்
    • கங்கை நீர் முதலை அல்லது கரியல் (கவியலிஸ் கேங்ஜெடிகஸ்).
  • இந்திய அரசு ஆனது, 1975 ஆம் ஆண்டில் ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்காவில் தனது முதலை வளங்காப்புத் திட்டத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்