இந்தியா 3 முதலை இனங்களுக்கு வாழிடமாகத் திகழ்கின்றது. அவையாவன:
சதுப்பு நில முதலை
உவர் நீர் முதலை (அ) செம்மூக்கு முதலை மற்றும்
கரியால்
சதுப்பு நில முதலையானது பெரும்பாலும் ஏரிகள், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு நன்னீர் வகை உயிர் இனமாகும்.
இது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் காணப்படுகின்றது.
உவர்நீர் முதலையானது ஒடிசாவின் பித்தர்கனிகா தேசியப் பூங்கா, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றில் காணப்படுகின்றது.
கரியால் பெரும்பாலும் இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் காணப் படுகின்றது.
இது “மிக அருகிய இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.
தேசிய சம்பல் கரியால் வனவிலங்குச் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் தேசிய சம்பல் சரணாலயமானது வட இந்தியாவில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
இது இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்திற்கு அருகில் சம்பல் நதிக் கரையில் அமைந்து உள்ளது.
முதலைப் பாதுகாப்புத் திட்டமானது 1975 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
கரியால் மற்றும் உவர்நீர் முதலைப் பாதுகாப்புத் திட்டமானது 1975 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலில் ஒடிசா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு சதுப்பு நில முதலைப் பாதுகாப்புத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
“CrocBITE” என்பது மனிதர்களின் மீதான முதலைகளின் தாக்குதல்களைப் பதிவு செய்யும் ஒரு நிகழ்நேரத் தரவுத் தளமாகும்.