இந்திய நாடானது மூன்றாவது உலக தெற்கு நாடுகள் உச்சி மாநாட்டினை நடத்தியது.
21 நாடுகளின் மாகாண மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் உட்பட 123 நாடுகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றன.
இந்தியப் பிரதமர் அவர்கள் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான மனிதர்களை மையமாகக் கொண்ட "உலகளாவிய மேம்பாட்டு ஒப்பந்தத்தினை" உருவாக்குவதற்கு முன்மொழிந்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் அடிப்படையில் வர்த்தகம், தொழில் நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் சலுகை சார் நிதியுதவி ஆகியவற்றை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சார்ந்த நெருக்கடிகள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் உலகின் தெற்கு நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினாலும், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப இந்த 'ஒப்பந்தம்' இருக்கும்.