சர்வதேச அளவில் யானைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கங்களாக,
ஆபத்து நிலையில் உள்ள ஆப்ரிக்க-ஆசிய யானைகளைப் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்குதல்.
யானைகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல்.
யானைகளை சிறந்த முறையில் நலம் பேணுதல் மற்றும் பாதுகாத்தல்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் பட்டியலில் (IUCN Red List) ஆப்பிரிக்க யானைகள் அழிவாய்ப்புக்குட்பட்ட இனப்பட்டியலிலும் (Vulnerable), ஆசிய யானைகள் அருகிய இனப்பட்டியலிலும் (Endangered) சேர்க்கப்பட்டுள்ளன.