TNPSC Thervupettagam

உலக யுனானி தினம் - பிப்ரவரி 11

February 14 , 2020 1749 days 921 0
  • ஒவ்வொரு ஆண்டும், ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த நாளான பிப்ரவரி 11 அன்று, உலக யுனானி தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • அவர் ஒரு இந்திய யுனானி மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • இந்த நாளின் முக்கிய நோக்கமானது யுனானி மருத்துவ முறை, அதன் நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் நோய் தீர்க்கும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதாகும்.
  • அந்த நாளை நினைவுகூரும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. அதில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
  • யுனானி மருத்துவ முறையானது கிரேக்கத்தில் தோன்றியது.
  • இது இந்தியாவில் ஏறக்குறைய பதினொன்றாம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் பாரசீகர்களால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • ஹக்கீம் அஜ்மல் கானின் தாத்தா ஹக்கீம் ஷெரீப் கான் முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்திற்கு மருத்துவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்