ஹூருன் அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலக யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற குறியீட்டின் படி இந்தியா 68 புதிய யூனிகார்ன் நிறுவனங்களுடன் இதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
666 யூனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட அமெரிக்கா மற்றும் 316 யூனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இருப்பினும், இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் எதுவும் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெறவில்லை.
22 பில்லியன் டாலர் மதிப்புள்ள இயங்கலை கல்வி வழங்கீட்டு நிறுவனமான BYJU’S இந்தியாவின் ஒரு முன்னணி யூனிகார்ன் நிறுவனமாகும்.
அதைத் தொடர்ந்து உணவு விநியோகத் தளமான ஸ்விகி மற்றும் கற்பனையான ஒரு விளையாட்டுத் தளமான ட்ரீம்11 ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியா அதிக எண்ணிக்கையிலான கேசல் நிலை நிறுவனங்களை (20% விற்பனை அதிகரிப்பினைக் கொண்ட நிறுவனங்கள்) கொண்ட மூன்றாவது நாடாக உள்ளது என்றாலும் ஹுருன் அமைப்பின் 500 உலக நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றது.
சான் பிரான்சிஸ்கோ, ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் ஷென்சென் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய அதிகப் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட ஐந்து நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நகரும் ஒன்றாகும்.
இவை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஹுருன் அமைப்பின் 500 உலக நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.