TNPSC Thervupettagam

உலக ரேபிஸ் தினம்- செப்டம்பர் 28

September 29 , 2017 2612 days 767 0
  • ரேபிஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் பரப்ப உலக ரேபிஸ் தினம் செப்டம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • 2017 ஆம் வருடத்திற்கான கருத்துரு - " ரேபிஸ் - 30 க்குள் பூஜ்யம் "
  • வெப்ப ரத்த பிராணிகளின் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வைரல் நோய் ரேபிஸ் ஆகும்.
  • இது சாதாரணமாக ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு பரவும் ஒரு விலங்கு வழி நோயாகும். உதாரணத்திற்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் மனிதர்களை கடிக்கும் பொழுது  இவ்வைரஸ் பரவுகிறது.
  • இந்த ரேபிஸ் வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து மூளையில் நோயை ஏற்படுத்தி கடைசியில் மரணத்திற்கு வழிகோலுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்