TNPSC Thervupettagam

உலக ரேபீஸ் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2018 2247 days 500 0
  • உலகளாவிய ரேபீஸ் தினமானது, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் வெறிநாய்க்கடி நோயைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வை உருவாக்க ஏற்படுத்தப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருப்பொருளானது ‘ராபீஸ் தகவலை பகிர்க. உயிரைக் காப்பாற்றுக’ (Rabies: Share the message. Save a life) என்பதாகும்.
  • விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீதான வெறிநாய்க்கடியின் பாதிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளானது உலகளாவிய ரேபிஸ் தடுப்பு கூட்டணியின் ஒரு முயற்சியாகும். இது 2007ல் தொடங்கப்பட்டது.
  • இந்த செப்டம்பர் 28 ஆனது, பிரெஞ்சு வேதியிலாளரும் நுண்ணுயிரியலாளருமான,  முதன்முதலில் ரேபீஸ் தடுப்பூசியை உருவாக்கியவருமான லூயிஸ் பாஸ்டரின் இறந்த நாளின் நினைவாக குறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்