‘தூய்மையான காற்றிற்கான ஒரு போராட்டம்: தெற்கு ஆசியாவில் காற்று மாசுபாடு மற்றும் பொதுச் சுகாதாரம்’ என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள 10 நகரங்களில் ஒன்பது நகரங்கள் தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ளன.
உலகளவில் மோசமான காற்று தரம் உள்ள நகரங்களின் பட்டியலில் டாக்கா ஏழாவது இடத்தில் உள்ளது.
வங்காளதேசத்தில் ஏற்படும் மொத்த அகால மரணங்களில் சுமார் 20 சதவீதம் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படுபவையாகும்.
தெற்காசியாவில், ஏறக்குறைய 60% மக்கள் தொகையானது PM2.5 செறிவுகள் குறித்த வருடாந்திரச் சராசரியான 35 μg/m3 (உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் அளவு 5 μg/m3) என்ற அளவினை விட அதிகமாக இருக்கும் பகுதிகளில் வாழ்கின்றனர்.
மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இந்திய-கங்கைச் சமவெளியில், இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த அறிக்கையானது, தெற்காசியாவில் உள்ள ஆறு முக்கியக் காற்றுப் படுகைகளை அடையாளம் கண்டுள்ள நிலையில் அங்கு நிலவும் காற்றின் தரத்தில் ஒரு இடஞ்சார்ந்த சார்பு நிலை அதிகமாக உள்ளது.