உலக வங்கியின் இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வு அறிக்கை
December 6 , 2022 718 days 379 0
உலக வங்கியானது, அதன் 37வது இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு அறிக்கையினை (2022) சமீபத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கைக்கு ‘பண வரவுகள் துணிகரமிக்க உலகளாவிய சிக்கல்களை எதிர் கொள்ளும்: சிறப்பு கவனம் பருவநிலை சார்ந்த இடம்பெயர்வு’ என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பண வரவானது 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்து 626 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இது 2021 ஆம் ஆண்டில் பதிவான 10.2 சதவீத அதிகரிப்பிற்கும் குறைவானதாகும்.
இந்த வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் மேலும் 2 சதவீதம் குறையும் என எதிர் பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் அதிக பணம் வரவைப் பெறும் முதல் ஐந்து நாடுகள் இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியவையாகும்.