இந்தியாவின் ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மை (Integrated Coastral Zone Management – ICZM) திட்டம், பல மேம்பாட்டுக் குறிக்கோள்களை சாதித்துக் காட்டிய அபூர்வமான செயல்திறனுக்காக உலக வங்கியின் உள்நாட்டு விருதினை வென்றுள்ளது.
தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள உலக வங்கியின் பணிக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 42 இறுதித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 விருது பெற்ற திட்டங்களில் ICZM திட்டம் ஒன்றாகும்.
ICZM
ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மைத் திட்டம், நாட்டில் விரிவான கடலோர மேலாண்மை அணுகுமுறையினை செயல்படுத்துவதற்கான தேசிய திறனை கட்டமைப்பதனை நோக்கமாகக் கொண்ட உலக வங்கியின் ஆதரவு பெற்ற திட்டம் ஆகும்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை சமூகத்தினை (Society of integrated Coastal Management – SICOM) அமைப்பதன் மூலம் ICZM திட்டத்தினைத் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ், SICOM 4 கூறுகளை செயல்படுத்துகிறது. அவை,