2022-ல் முடிவடையும் பதவிக் காலத்திற்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலக வங்கியின் தலைவரான ஜிம் யோங் கிம் பதவி விலகுகிறார்.
இவர் 2012 ஆம் ஆண்டில் உலக வங்கியின் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது 5 ஆண்டு காலத்திற்கு வங்கியின் வாரியத்தினால் 2017 ஆம் ஆண்டில் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
கிம்மின் தலைமையிலான உலக வங்கியானது 2030க்குள் தீவிர வறுமையை அகற்றுவதை இலக்காக அமைத்திருந்தது.
உலக வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கிம்மின் பதவி விலகுவதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் இடைக்காலத் தலைவராக பணியாற்றுவார்.