TNPSC Thervupettagam

உலக வங்கியின் புதியத் தலைவர்

March 1 , 2023 509 days 306 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி அஜய் பங்காவினை உலக வங்கியின் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளார்.
  • சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு சிறந்த சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்றின் தலைவராகப் பதவியேற்க உள்ள முதல் இந்திய-அமெரிக்கர் இவரே ஆவார்.
  • ஒரு நிதிச் சேவை நிறுவனமான மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டது.
  • உலக வங்கியின் தலைவர், சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) அல்லது உலக வங்கி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (IDA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் அதிகாரப் பூர்வத் தலைவராக செயல்படுவார்.
  • உலக வங்கிக் குழுமத்தின் தலைவராக இருந்த அமெரிக்க வங்கித் துறையாளர் டேவிட் மல்பாஸ் சமீபத்தில் பதவி விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்