TNPSC Thervupettagam

உலக வங்கி – இந்தியா - தமிழ்நாடு

December 27 , 2017 2527 days 777 0
  • தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வேளாண்மையின் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (Tamilnadu Irrigated Agriculture Modernization Scheme) நிதியளிப்பதற்காக உலக வங்கி, இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே முத்தரப்பு கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இதன் வழியே, உலக வங்கியின் கடன் நல்கு அமைப்பான மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கியானது  ( International Bank for Reconstruction and Development-IBRD) 19 ஆண்டுகள் முதிர்ச்சி காலத்தோடு (Maturity period),  5 ஆண்டுகள் கூடுதல் அவகாச காலமுடைய (Grace Period) 318 மில்லியன் டாலர்களை கடனாக வழங்க உள்ளது.
  • சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும், தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை நடைமுறையை மேம்படுத்துவதற்காகவும், பருவநிலை நெகிழ்திறனுடைய (Climate Resilient) வேளாண் தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் இக்கடனுதவி அளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்