TNPSC Thervupettagam

உலக வசிப்பிட நாள் (World Habitat Day)

October 2 , 2017 2609 days 1783 0
  • உலக வசிப்பிட நாள் (World Habitat Day) - ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 1986 ல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படும் இந்நாளின் நோக்கம் நாம் வாழுகின்ற நகரங்களின்  நிலைகள் மற்றும் அவற்றில் அடிப்படை மனித உரிமையான போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
  • எதிர்கால தலைமுறையினருக்கான வாழ்விடத்தின் அவசியம் குறித்து  இன்றைய உலகம் மேற்கொள்ளவேண்டிய  கூட்டுப் பொறுப்பை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான உலக வசிப்பிட தினத்தின் கருத்துரு- மலிவான வீடுகள் மற்றும் வீட்டுவசதி கொள்கைகள் (Housing policy: Affordable Homes)
Habitat Scroll of Honourவிருது
  • ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயல்திட்டத்தினால் (UNHSP- United Nations Human Settlements Programme ) மனித வாழ்விடம் தொடர்பான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது உலக வசிப்பிட தினத்தன்று வழங்கப்படுகிறது.
  • இது உலகில் மனித குடியேற்றத்தில் வழங்கப்படும் மிக உயரிய கெளரவமிக்க விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்