உலக வனக் கண்காணிப்பு இணைய தளமானது செயற்கைக்கோள் தரவு மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி வனங்களில் ஏற்படும் ஒரு நிகழ்நேர மாற்றங்களைக் கண்காணிக்கிறது.
இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 2.33 மில்லியன் ஹெக்டேர் அளவிலான மரங்களின் பரவல் குறைந்துள்ளது என்பதோடு, இந்தக் காலக் கட்டத்தில் மரங்களின் பரவலில் ஆறு சதவிகிதம் குறைந்ததற்கு இது சமம் ஆகும்.
2001 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் உள்ள காடுகள் ஆண்டுக்கு 51 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியது மற்றும் ஓராண்டிற்கு 141 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை அகற்றியது.
இது ஓராண்டிற்கு 89.9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான நிகர கார்பன் ஈரப்பினைக் குறிக்கிறது.
தேசிய சராசரியான 66,600 ஹெக்டேர்களுடன் ஒப்பிடுகையில், அசாமில் அதிக பட்சமாக 324,000 ஹெக்டேர் மரங்கள் அழிந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் 312,000 ஹெக்டேர் மரங்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 262,000 ஹெக்டேர் மரங்களும், நாகாலாந்தில் 259,000 ஹெக்டேர் மரங்களும், மணிப்பூரில் 240,000 ஹெக்டேர் மரங்களும் அழிந்துள்ளன.
GFW தளத்தின் தரவு ஆனது, 2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அழிந்த மரங்களின் அளவில் ஐந்து மாநிலங்கள் 60 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் காடழிப்பு விகிதம் ஆனது, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 668,000 ஹெக்டேர் என்ற வருடாந்திர வீதத்தில் இருந்தது என்ற நிலையில் இது உலகளவில் இரண்டாவது மிக உயர்ந்த அளவாகும்.
2001 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, ஒடிசா மாநிலத்தில் ஆண்டிற்கு 238 ஹெக்டேர் என்ற சராசரி இழப்புடன், தீ விபத்துகளால் ஏற்பட்ட மரங்களின் இழப்பு ஆனது அதிக விகிதத்தில் இருந்தது.