TNPSC Thervupettagam

உலக வனக் கண்காணிப்பு

July 4 , 2023 381 days 263 0
  • உலக வளக் கழகத்தினால் (WRI) உலக வனக் கண்காணிப்பு என்ற மிகவும் புதிய ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், வெப்ப மண்டலப் பகுதிகளில் 4.1 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ள நிலையில், இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 11 கால்பந்து மைதானங்களின் பரப்பளவை இழப்பதற்குச் சமமாகும்.
  • இந்த வன இழப்பானது சுமார் 2.7 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினை உருவாக்கியது.
  • புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு காரணமாக இந்தியாவின் வருடாந்திர உமிழ்வுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் வெப்பமண்டலப் பகுதிகளில் ஏற்பட்ட முதன்மையான காடுகளின் இழப்பானது 2021 ஆம் ஆண்டை விட 10% அதிகமாகும்.
  • 2030 ஆம் ஆண்டு என்ற ஒரு இலக்கினை அடைய ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10% அளவிலான உலகக் காடழிப்பினைக் குறைக்க வேண்டும்.
  • 2022 ஆம் ஆண்டில், உலகக் காடழிப்பு விகிதமானது, 2018-2020 ஆண்டு வரையிலான அடிப்படையினை விட 3.1% குறைவாக இருந்தது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் 350 மில்லியன் ஹெக்டர் காடுகளை மீட்டெடுத்தல் என்ற இலக்கை அடைய, உலக நாடுகள் 2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 22 மில்லியன் ஹெக்டர் அளவில் மரங்களின் பரப்பளவினை அதிகரிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்