TNPSC Thervupettagam

உலக வனச்சரகர் தினம் – ஜூலை 31

July 31 , 2023 389 days 215 0
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் அமைந்த விருங்கா தேசியப் பூங்காவில் பணியில் இருந்த போது பரிதாபமாக உயிரிழந்த எட்டு வனச்சரகர்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • ‘வனச்சரகர்’ என்பது தேசியப் பூங்காக்கள் மற்றும் இயற்கைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நிபுணரையும் குறிக்கும் சொல் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்த தினத்தின் கருத்துருவான “30க்குள் 30” என்பது 2030 ஆம் ஆண்டிற்குள் புவியில் குறைந்தபட்சம் 30 சதவீதப் பகுதிகளைத் திறம்படப் பாதுகாத்து நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச வனச்சரகர் கூட்டமைப்பு (IRF) ஆனது பல்வேறு உலக நாடுகளில் பூங்கா வனச் சரகர்களின் பணியை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் 1992 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இந்த அமைப்பு நிறுவப்பட்டதன் 15வது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கச் செய்யும் வகையில் 2007 ஆம் ஆண்டில் முதன்முறையாக இத்தினம் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்