TNPSC Thervupettagam

உலக வனத்துறை கண்ணோட்ட அறிக்கை 2050

October 15 , 2022 644 days 380 0
  • "உலகளாவிய வனத்துறை கண்ணோட்டம் 2050: ஒரு நிலையான பொருளாதாரத்திற்கான எதிர்காலத் தேவை மற்றும் மரங்களின் வளங்களை மதிப்பீடு செய்தல்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • முதன்மையான பதப்படுத்தப்பட்ட மரப் பொருட்களின் நுகர்வானது 2050 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் அவற்றின் தேவை 272 மில்லியன் கன மீட்டர்கள் வரை உயரக் கூடும்.
  • இது வளர்ந்து வரும் நாடுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளால் தொழில்துறைப் பயன்பாடு சார்ந்த மரங்களின் உற்பத்தி (IRW) பாதிக்கப்படும் என்றும் இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், தொழில்துறை பயன்பாடு சார்ந்த மரங்களின் உற்பத்தியில் சுமார் 44 சதவீதம் மித வெப்ப மற்றும் போரியல் வகை காடுகளால் உருவாக்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில், எரிபொருள் பயன்பாடு சார்ந்த மரத்தின் உலகளாவிய நுகர்வு 1.9 பில்லியன் கன மீட்டராக இருந்தது.
  • 2050 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2.1 முதல் 2.7 பில்லியன் கன மீட்டரை எட்டுவதன் மூலம் 11 முதல் 42 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்