TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு தினம் - மார்ச் 03

March 7 , 2024 135 days 156 0
  • 1973 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) இனங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் எனபது கையெழுத்தானது.
  • பல்லுயிர்ப் பெருக்கத்தினைப் பாதுகாக்க உதவும் பல நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், விலங்குகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தாய்லாந்து அரசினால் முன்மொழியப்பட்டது.
  • பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த நாளை அனுசரிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "மக்களையும் கோளினையும் இணைத்தல் : வனவிலங்குப் பாதுகாப்பில் எண்ணிமம் சார்ந்த புத்தாக்கங்களை ஆராய்ந்து செயல்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்