ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (United Nations General Assembly - UNGA) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியன்று நடைபெற்ற தனது 68-வது அமர்வின்போது மார்ச் 03-ம் தேதியை உலக வனவுயிர் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
அழியும் தருவாயில் உள்ள வனவுயிர் மிருகங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை இத்தினம் குறிக்கின்றது.
தாய்லாந்தால் இத்தினம் உலகத்தின் வனவிலங்கு மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி அனுசரித்திட முன்மொழியப்பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “நீருக்கடியிலான வாழ்க்கை: மக்களுக்காகவும் கிரகத்திற்காகவும்” என்பதாகும்.