TNPSC Thervupettagam

உலக வன உயிர் தினம் - மார்ச் 3

March 4 , 2018 2457 days 1516 0
  • நமது புவியினுடைய தாவரவியல் மற்றும் விலங்கியல் வளங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 3 ஆம் தேதி உலக வன உயிர் தினம் (World Wildlife day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக வனஉயிர் தினத்தின் கருத்துரு “பெரிய பூனைகள் - வேட்டை விலங்குகள் அச்சுறுத்தலில் உள்ளன”. (“Big cats - Predators under threat”)
  • மார்ச் 3 ஆம் தேதி தான் CITES உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டது.

  • 2014-ஆம் ஆண்டிலிருந்து உலக வன உயிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதற்காகவும் அவற்றின் உயிர் வாழ்வை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச அளவில் 183 நாடுகளின் அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கையே வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கை CITES ஆகும் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora, also known as the Washington Convention - CITES).
  • உலக அளவில் தற்போது வன விலங்குகளானது வாழிட இழப்பு, வேட்டையாடுதல், மனித - வனவிலங்கு மோதல்கள், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு  பெரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்