TNPSC Thervupettagam

உலக வன வளங்கள் ஆய்வு அறிக்கை 2020

July 28 , 2020 1455 days 632 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • FAO ஆனது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அறிக்கையை வெளியிடுகின்றது.
  • இந்த அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வனப் பரவலை அதிகரித்த முதல் 10 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் உள்ளூர், பூர்வகுடிச் சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் வனப் பகுதியானது 1990 ஆம் ஆண்டில் 0 என்ற அளவிலிருந்து 2015 ஆம் ஆண்டில் 25 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உலகமானது தனது மொத்த நிலப்பரப்பில் 31% வனப் பகுதியைக் கொண்டுள்ளது.
  • ரஷ்யாவானது உலக வனப்பரப்பில் 20% என்ற அளவில் அதிக அளவிலான வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து பிரேசில் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதிக வனப் பரப்பைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்