TNPSC Thervupettagam

உலக வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள் 2024

April 17 , 2024 221 days 318 0
  • உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆனது சமீபத்திய "உலக வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள்" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகளவில் வணிகம் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களின் அளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 1.2% ஆக வீழ்ச்சியடைந்த பின்னர் 2024 ஆம் ஆண்டில் 2.6% ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 3.3% ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • எரிசக்திகளின் அதிகபட்ச விலைகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை உற்பத்திப் பொருட்களுக்கான தேவையின் மீது அதிகத் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
  • இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டிற்கான உலகளவில் வர்த்தகம் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களின் அளவில் 1.2% சரிவு ஏற்பட்டது.
  • இந்தச் சரிவானது, வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 5% குறைந்து 24.01 டிரில்லியன் அளவு அமெரிக்க டாலராக குறைந்ததுடன், மதிப்பின் அடிப்படையில் ஒரு மிகப் பெரிய அளவிலான சரிவாகப் பதிவானது.
  • வர்த்தகச் சேவைகள் ஏற்றுமதியானது 9% அதிகரித்து 7.54 டிரில்லியன் டாலர்கள் ஆக இருந்ததுடன் சேவைகள் வர்த்தகம் ஆனது மிகவும் உச்ச அளவில் இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் சுமார் 3.1 சதவீதமாக இருந்த உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது, 2023 ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாக குறைந்து, 2024 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் நிலையானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்