உலக வர்த்தக அமைப்பின் (WTO - World Trade Organizations) “பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பில்” நிகழும் குளறுபடிகளைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதற்காக 20ற்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் புது தில்லியில் சமீபத்தில் சந்தித்தன.
WTO மேல்முறையீட்டு அமைப்பு என்பது 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிலைக் குழுவாகும்.
WTO உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் மேல்முறையீடுகளை இந்த அமைப்பு விசாரிக்கின்றது.
WTOவின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடைமுறையானது சர்வதேச வர்த்தகம் சீராக நடைபெறுவதற்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
கடந்த 2 ஆண்டுகளாக தேவைப்படும் 7 உறுப்பினர்களுக்குப் பதிலாக இந்த அமைப்பின் உறுப்பினர் அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் WTO ஆனது தனக்கு எதிராகச் செயல்படுகின்றது என்று அமெரிக்கா நம்புகின்றது. எனவே அமெரிக்கா இந்த அமைப்பின் நியமனங்களைத் தடை செய்துள்ளது.
இந்தியா இதுவரை 54 பிரச்சினைகளில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளது. 158 பிரச்சினைகளில் இந்தியா மூன்றாவது நபராகப் பங்கு பெற்றுள்ளது.