டெய்பி உலக வர்த்தக மையமானது (Taipei World Trade Centre -TWTC) புது தில்லியில் தன்னுடைய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.
வர்த்தகத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களையும், பொலிவுறு நகரங்களின் தீர்வைகளையும் காட்சிப்படுத்த உள்ள தைவானின் முதல் கண்காட்சிக்கு முன் கூட்டியே இந்த வர்த்தக மையம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது
தைவானில் வர்த்தக மேம்பாட்டிற்கான முதன்மை அரசு அமைப்பான தைவான் அரசாங்கத்தின் தைவான் வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (Taiwan External Trade Development Council-TAITRA) இந்த அலுவலகத்தை புதுதில்லியில் அமைக்க ஏற்கனவே முன்மொழிவை வழங்கியிருந்தது.
இந்தியா மற்றும் தைவானிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக இந்த அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தைவானிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.