TNPSC Thervupettagam

உலக வர்த்தக மையம் - தில்லி

May 1 , 2018 2274 days 718 0
  • டெய்பி உலக வர்த்தக மையமானது (Taipei World Trade Centre -TWTC) புது தில்லியில் தன்னுடைய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.
  • வர்த்தகத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களையும், பொலிவுறு நகரங்களின் தீர்வைகளையும் காட்சிப்படுத்த உள்ள தைவானின் முதல் கண்காட்சிக்கு முன் கூட்டியே இந்த வர்த்தக மையம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது
  • தைவானில் வர்த்தக மேம்பாட்டிற்கான முதன்மை அரசு அமைப்பான தைவான் அரசாங்கத்தின் தைவான் வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (Taiwan External Trade Development Council-TAITRA) இந்த அலுவலகத்தை புதுதில்லியில் அமைக்க ஏற்கனவே முன்மொழிவை வழங்கியிருந்தது.
  • இந்தியா மற்றும் தைவானிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக இந்த அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் தைவானிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்