உலக வலசைப் போக்குப் பறவைகள் தினமானது தற்போது ஆண்டிற்கு இரண்டு முறை, மே மற்றும் அக்டோபர் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
இந்நாளைக் கடைப்பிடிப்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வலசைப் போக்குப் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது.
1993 ஆம் ஆண்டில், அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்குச் சேவை அமைப்பு, ஸ்மித்சோனியன் வலசைப் போக்குப் பறவை மையம் மற்றும் கார்னெல் பறவையியல் ஆய்வகம் ஆகியவை இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கின.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'தண்ணீர் மற்றும் வலசைப் போக்குப் பறவைகளுக்கு அதன் முக்கியத்துவம்' என்பதாகும்.
உலகளவில், குறைந்தது 4,000 வகையான பறவைகள் வழக்கமான வலசைப் போக்கு செய்யும் பறவைகளாக உள்ள நிலையில் இது உலகின் மொத்தப் பறவைகளில் 40 சதவீதம் ஆகும்.