ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் உலக வளங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலகளவில் இயற்கை வளங்களின் நுகர்வு ஆனது 2060 ஆம் ஆண்டில் 60 சதவீதம் உயரும் என்பதை இது எடுத்துரைக்கிறது.
தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் மீதான காரணமாக, 1970 ஆம் ஆண்டு முதல் இயற்கை வளங்களின் நுகர்வு கிட்டத்தட்ட 400% உயர்ந்துள்ளது.
பூமியின் இயற்கையான வளங்கள் அகற்றப்படுவது, ஏற்கனவே 60% உலகளாவிய வெப்பம் சார்ந்த தாக்கங்களுக்கு காரணமாக உள்ளது.
இதில் நிலப் பயன்பாட்டு மாற்றம், 40% காற்று மாசு பாதிப்பு மற்றும் 90%க்கும் அதிகமான உலகளாவிய நீர் நெருக்கடி மற்றும் நிலம் தொடர்பான பல்லுயிர்ப் பெருக்க இழப்பு ஆகியவை அடங்கும்.
வழக்கமான மகிழுந்துகளை விட மின்சார வாகனங்கள் சுமார் 10 மடங்கு அதிக "முக்கிய மூலப்பொருட்களை" பயன்படுத்துகின்றன.