மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு க்யூர் இந்தியா அமைப்பு இணைந்து நடத்தும் உலக வளைபாதங்கள் மாநாட்டை ( World Clubfoot Conference ) இந்திய குடியரசுத் தலைவர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
வளைபாதம் என்பது ஒரு பாதமோ (அ) இரு பாதங்களுமோ உள் நோக்கியவாறோ (அ) வெளிநோக்கியவாறோ பிறழ்ச்சியடைந்து இருக்கும் ஓர் பிறப்பு எலும்பியல் குறைபாடாகும்.
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளிக்காவிடின் இது நிரந்த இயலாமையை (உடற் சவாலை) ஏற்படுத்தும்.
வளை பாதங்களுக்கான காரணம் இன்னமும் சரியாக அறியப்படவில்லை. ஆனால் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் இணைவு காரணிகள் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.