TNPSC Thervupettagam

உலக வானிலையியல் அமைப்பின் அறிக்கை - 2022 ஆம் ஆண்டில் உலகப் பருவ நிலையின் நிலை

November 16 , 2022 738 days 473 0
  • UNFCCC அமைப்பின் 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் 'உலக வானிலையியல் அமைப்பின் உலகப் பருவநிலையின் தற்போதைய நிலை அறிக்கை 2022' என்ற தலைப்பிலான அறிக்கையானது வெளியிடப்பட்டது.
  • 1993 ஆம் ஆண்டிலிருந்து கடல் மட்ட உயர்வு விகிதமானது இருமடங்காக அதிகரித்து உள்ளது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020 ஜனவரி மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மிமீ வரை உயர்ந்து இந்த ஆண்டு புதிய சாதனை அளவாக பதிவாகியுள்ளது.
  • கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவான கடல் மட்டத்தின் ஒட்டு மொத்த உயர்வு விகிதம் 10% ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, தொழில் துறை முன்னேற்றத்திற்கு முந்தைய (1850-1900) காலத்தில் பதிவான சராசரி அளவினை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய எட்டு ஆண்டுகளை அதிக வெப்பமான ஆண்டுகளாக குறிப்பிடுவதற்குக் காரணமானது.
  • இந்த 2022 ஆம் ஆண்டின் தற்காலிக அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை உள்ள பதிவுகளாகும்.
  • இந்த அறிக்கையின் இறுதிப் பதிப்பு ஆனது அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் படும்.
  • லா நினா நிலைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கின்றன.
  • ஆனால் 2022 ஆம் ஆண்டானது ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக பதிவு செய்யப்பட இன்னும் வாய்ப்பு உள்ளது.
  • 2013-2022 காலகட்டத்திற்கான 10 ஆண்டு சராசரியானது தொழில்துறை முன்னேற்றத்திற்கு முந்தைய காலத்தில் பதிவான அடிப்படை அளவினை விட 1.14 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2011 முதல் 2020 வரை பதிவான 1.09 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையுடன் ஒப்பிடப் படுகிறது.
  • வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சுமார் 700 பேரும், மின்னல் தாக்குதலால் 900 பேரும் உயிரிழந்துள்ளனர்.
  • வெள்ளப் பாதிப்பானது அசாம் மாநிலத்தில் 6,63,000 பேர் இடம் பெயர்வதற்குத் தூண்டுதலாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்