உலக வானிலையியல் அமைப்பின் அறிக்கை - 2022 ஆம் ஆண்டில் உலகப் பருவ நிலையின் நிலை
November 16 , 2022 741 days 474 0
UNFCCC அமைப்பின் 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் 'உலக வானிலையியல் அமைப்பின் உலகப் பருவநிலையின் தற்போதைய நிலை அறிக்கை 2022' என்ற தலைப்பிலான அறிக்கையானது வெளியிடப்பட்டது.
1993 ஆம் ஆண்டிலிருந்து கடல் மட்ட உயர்வு விகிதமானது இருமடங்காக அதிகரித்து உள்ளது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஜனவரி மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மிமீ வரை உயர்ந்து இந்த ஆண்டு புதிய சாதனை அளவாக பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவான கடல் மட்டத்தின் ஒட்டு மொத்த உயர்வு விகிதம் 10% ஆகும்.
2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, தொழில் துறை முன்னேற்றத்திற்கு முந்தைய (1850-1900) காலத்தில் பதிவான சராசரி அளவினை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு உள்ளது.
இது 2015 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய எட்டு ஆண்டுகளை அதிக வெப்பமான ஆண்டுகளாக குறிப்பிடுவதற்குக் காரணமானது.
இந்த 2022 ஆம் ஆண்டின் தற்காலிக அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை உள்ள பதிவுகளாகும்.
இந்த அறிக்கையின் இறுதிப் பதிப்பு ஆனது அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் படும்.
லா நினா நிலைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கின்றன.
ஆனால் 2022 ஆம் ஆண்டானது ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக பதிவு செய்யப்பட இன்னும் வாய்ப்பு உள்ளது.
2013-2022 காலகட்டத்திற்கான 10 ஆண்டு சராசரியானது தொழில்துறை முன்னேற்றத்திற்கு முந்தைய காலத்தில் பதிவான அடிப்படை அளவினை விட 1.14 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2011 முதல் 2020 வரை பதிவான 1.09 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையுடன் ஒப்பிடப் படுகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சுமார் 700 பேரும், மின்னல் தாக்குதலால் 900 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளப் பாதிப்பானது அசாம் மாநிலத்தில் 6,63,000 பேர் இடம் பெயர்வதற்குத் தூண்டுதலாக இருந்தது.