TNPSC Thervupettagam

உலக வானிலை அமைப்பின் ஆசிய நாடுகளில் பருவ கால நிலை 2022 அறிக்கை

August 1 , 2023 353 days 268 0
  • ஆசியக் கண்டமானது உலகிலேயே அதிகளவில் பேரழிவுப் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக உள்ளதோடு, 2022 ஆம் ஆண்டில் ஆசியாவில் 81 வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்பான பேரழிவுகள் காரணமாக 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்பகுதியில் நிகழ்ந்தப் பேரிடர் நிகழ்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இயற்கைப் பேரழிவுகளால் சுமார் 5,879 ஆசிய நாட்டவர்கள் இறந்து உள்ளனர்.
  • இது இந்தப் பிராந்தியம் முழுவதும் 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மனித இறப்புகளை விட சுமார் 55 சதவீதம் அதிகமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டப் பேரழிவுகளால் இந்தக் கண்டத்தில் வாழும் மக்களில் 52 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 48.3 மில்லியனாகப் பதிவானப் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
  • இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட சேதத்தின் பொருளாதாரச் செலவு சுமார் 36 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
  • இதில் குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுடன் பாகிஸ்தான் 42 சதவிகிதம் பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் வறட்சியினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் (7.6 பில்லியன் டாலர்கள்) ஆகும்.
  • இத்தகையப் பொருளாதார இழப்பானது சீனாவில் பெருமளவில் பதிவாகியுள்ளது.
  • சீனாவின் பொருளாதார இழப்பானது 2002 முதல் 2021 வரையிலான 20 ஆண்டு காலச் சராசரியை விட (2.6 பில்லியன் டாலர்) சுமார் 200 சதவிகிதம் தாண்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்