TNPSC Thervupettagam

உலக வானொலி தினம் - பிப்ரவரி 13

February 16 , 2021 1291 days 477 0
  • 2011 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் பொது மாநாடானது அதன் 36வது அமர்வில், பிப்ரவரி 13 ஆம் தேதியினை உலக வானொலி தினமாக அறிவித்தது.
  • இந்நாள் ஐக்கிய நாடுகள் வானொலி அமைப்பின் ஆண்டு தினத்துடன் ஒத்துப் போகிறது.
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஒளிபரப்புச் சேவையானது  1946 ஆம் ஆண்டில் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இது 10வது ஆண்டு விழாவாகும்.
  • இந்த ஆண்டு பின்வரும் மூன்று துணை கருப்பொருள்கள் மூலம் இந்நாள் கொண்டாடப் படும்.
  • பரிணாமம்: உலகம் மாறுகிறது, வானொலி வளர்கிறது எனவே வானொலி உறுதியானது மற்றும் நிலையானது.
  • புத்தாக்கம்: உலகம் மாறுகிறது, வானொலி தன்னை மாற்றிக் கொள்கிறது மற்றும் புதுமைகளை உருவாக்குகிறது - வானொலி புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றது, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது, இது எல்லா இடங்களிலும் மற்றும் அனைவருக்கும் அணுகக் கூடியது.
  • இணைப்பு: உலகம் மாறுகிறது, வானொலி இணைக்கின்றது - இயற்கைப் பேரழிவுகள், சமூகப் பொருளாதார நெருக்கடிகள், தொற்றுநோய்கள் போன்றவற்றின் போது நமது சமூகத்திற்கு வானொலி தமது  சேவைகளை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்