உலக வங்கியின் சமீபத்திய உலக வாயு எரிப்பு கண்காணிப்பு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நைஜீரியா முதல் ஒன்பது வாயு எரிப்பு நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 139 bcm ஆக இருந்த உலகளாவிய வாயு எரிப்பு அளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 7% அதிகரித்து 148 bcm ஆக உயர்ந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தியானது ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்ததால், உலகளாவிய சராசரி வாயு எரிப்புகளின் செறிவு அதிகரித்தது.
வாயு எரிப்பு ஆனது மொத்தமாக 9 bcm அதிகரிப்பதால் கூடுதலாக 23 மில்லியன் டன்கள் CO2e வெளியேற்றம் பதிவானது.
வாயு எரிப்பு செய்யும் முதல் ஒன்பது நாடுகள் அனைத்து வாயு எரிப்புகளில் 75% பங்கைக் கொண்டுள்ளன ஆனால் அவை உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 46% பங்கினை மட்டுமே கொண்டுள்ளன.
60 க்கும் மேற்பட்ட நாடுகளில் மீதமுள்ள 25 சதவீத உலகளாவிய வாயு எரிப்பு அளவுகள் பதிவாகியுள்ளன.
உலகின் எரிம வாயுவில் 75% ஆனது நைஜீரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், அமெரிக்கா, வெனிசுலா, அல்ஜீரியா மற்றும் லிபியாவில் இருந்து பெறப்படுகிறது.